2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பூமாவதி தனிநாயகம்
வயது 84
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பூமாவதி தனிநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-11-2023
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு இரண்டு மறைந்தாலும்
ஆறிடுமோ எங்கள் துயரமம்மா?
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
உத்தமியே எங்கள் அன்புத் தெய்வமே
உன் பிரிவால் துடிக்கின்றோம்
உன்னை நினைத்து நித்தம்
கண்ணீர் வடிக்கின்றோம்
துன்பத்தை நீ சுமந்தாலும் எமக்கு
இன்பத்தை ஊட்டி வளர்த்தவளே- அம்மா
மண்ணிலே மீண்டும் வந்து பிறவாயோ?
மறுபடியும் எம்மோடு கலந்து வாழ்வாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்