Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 APR 1965
இறப்பு 28 JUL 2010
அமரர் பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வயது 45
அமரர் பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் 1965 - 2010 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 06-08-2024

என் அருமைக் கணவரே!
என்னையும் நம் பிள்ளைகளையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!

வானடைந்து பதினான்கு ஆண்டு ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
 நீங்கள் எங்களைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம்..  

காலன் உம்மைப் பறித்து பதினான்கு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்- உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!

உங்களையே உலகமென
 உறுதியாய் 
நாமிருக்க- ஏன்
விண்ணுலகம் 
நிரந்தரமாய் விரைந்தீரோ?

காலங்கள் மாறலாம்
உங்களை இழந்த ஆண்டுகள் மாறலாம்
உங்களுடன் வாழ்ந்த இனிய
நினைவுகள் காலத்தால்
எப்போதும் மாற்ற முடியாது..

எங்கள் ஜீவன் எம்முள் இருக்கும்
வரைக்கும் உங்களது நினைவலைகள்
எம்முள் ஓடிக்கொண்டு இருக்கும்...
என்றும் எம்முள் வாழ்ந்து
கொண்டிருப்பீர்கள்..

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices