Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 APR 1965
இறப்பு 28 JUL 2010
அமரர் பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வயது 45
அமரர் பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் 1965 - 2010 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமது உயிர் அப்பா
பத்தாண்டு சென்றனவே எமைவிட்டு
கனவாக நாம் இங்கு அதை நினைத்து
வாழ்கின்றோம்

உன் முகத்தைப் பார்க்க எம்
விழிகள் ஏங்குகையில்....  உம்
மழலைகளின் முகத்தில் உமைக்கண்டு எம்
ஏக்கம் தீர்க்கின்றோம்.

அன்பால் அரவணைப்பால் எங்களைச் சிறப்புற
வாழவைத்து அதைப் பார்த்து மகிழாமல்
பாதியில் சென்றுவிட்டீர் !

நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !

பத்து ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
அப்பா! உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் பிரார்த்திக்கும் உங்கள்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமகள்,
பேத்தி, உற்றார், உறவினர்கள்! 
 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices