

-
17 APR 1965 - 28 JUL 2010 (45 வயது)
-
பிறந்த இடம் : முள்ளியவளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Basel, Switzerland
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபாலசிங்கம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
கரம்பிடித்தவளோடு வாழ்வில் பாதியாய் பக்கபலமாய்
இருக்காது பாதியிலே பரிதவிக்க விட்டு மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல் உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
சிரித்து வாழ்ந்த காலமெல்லாம்
சிறகடித்துப் பறந்தது
உங்கள் சிரித்த முகம் எப்போது
காண்போம் அப்பா...
கண்ணை மூடி நான் தூங்க
கனவில் உந்தன் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் உன் முகத்தை
நான் யாரிடமும் இன்னும் அறியலையே.....
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
முள்ளியவளை, Sri Lanka பிறந்த இடம்
-
Basel, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆண்டடுகள் பத்து கடந்தாலும் உந்தன் ஆசைமுகமும் நினைவுகளும் எங்கள் நினைவிலிருந்து என்றும் நீங்காது. உங்கள் பிரிவுத்ததுயரால் கலங்கி நிற்கும் மாமா,மாமி...