

யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கோயில் சந்தை, உடுப்பிட்டி சந்தை வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மகேசு அவர்கள் 06-08-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, ரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயராணி(மகா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபோசினி(பிரித்தானியா), கௌசினி(பிரித்தானியா), கேசவன்(பிரித்தானியா), விஜிந்தன்(திருச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தியாகராசா, ஸ்ரீஸ்கந்தராசா(இலங்கை), காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் குணசிங்கம்(பொட்டா- இந்தியா), பரமேஸ்வரி(பிள்ளை- இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வக்குமார், உதயசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற விஜயலக்ஸ்மி(ஜெயா), சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மராசா அவர்களின் பாசமிகு சகலையும்,
சுமந்தா, சுஜானா, சாருகா, கனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது திருச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் திருச்சி ஓயாமாரி இந்து மயானத்தில் பூதவுடல்
தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.