5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1946
இறப்பு 18 JUN 2016
அமரர் பொன்னு கந்தசாமி (நவம்)
வயது 69
அமரர் பொன்னு கந்தசாமி 1946 - 2016 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னு கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வருடங்கள் ஐந்து கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்

ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு ஐந்தாகியும் ஆறவில்லை  எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!

எம் வாழ்வில் நீங்கள் இல்லை
என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில்
நாம் வாழும் காலம்வரை!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்