மிகவும் சிறந்த பண்புகளைக் கொண்ட எமது அன்பிற்குரிய மாமாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், தனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், தான் அங்கம் வகித்த தொண்டு அமைப்பின் ஊடாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தவர். அவர் இருக்கும் இடமெல்லாம் தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் அனைவரையும் மகிழ்விப்பவர். நடிப்பு, பேச்சுத்திறமை எனப் பல திறமைகளைக் கொண்டவர். எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவருக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. எனது திருமணத்தில் மாமனாக முன்னின்று பல கடமைகளைச் செய்து, அந்த முக்கியமான தருணத்தில் எனக்குத் துணையாக இருந்ததை என்றும் மறக்க முடியாது. இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் அவர் செய்த தொண்டுகளும் நன்மைகளும், அவர் விட்டுச் சென்ற இனிய நினைவுகளும் என்றும் அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்யும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என்றும் எங்கள் நினைவில் மாமா. 🙏
ஈசன் அண்ணா அண்ணா! உங்களை உங்களுடைய உடல்நிலை பற்றி நான் கேள்விப்பட்டதில் இருந்து உங்களை வந்து பார்ப்பதற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை காரணம் செல்வியும் பிள்ளைகளும் எப்படி உங்களுடன்...