யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா கந்தசாமி அவர்களின் நன்றி நவிலல்.
பண்பால், பாசத்தால், நேர்மையால், பத்தியால் உயர்ந்துநின்று, இன்முகம் காட்டி, இனிய சொற்புகட்டி நல்வழி காட்டி நானிலம் போற்ற வைத்த எமது குடும்பத்தின் ஒளிவிளக்காய், குலவிளக்காய் எங்கள் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தியாக தீபமாக வாழ்ந்த எம் ஆருயிர் அப்பா எம்மை விட்டு சென்ற நேரத்தில் எம் துயர் துடைக்க ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கும், அவரது புகழுடம்பிற்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டோருக்கும், அவர் வாழ்ந்த ஊரான வடலியடைப்பிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று அனுதாப நிகழ்வில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், ஊர்மக்கள், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வையும் நினைவஞ்சலியையும் எம் உறவுகளோடு இணைந்து செய்ய முடியாததையிட்டு மனம் வருந்துகின்றோம்.
பிரார்த்திக்கின்றோம் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், ஓம் சாந்தி