

சுப்பையா மாஸ்டர் ! நீங்கள் நாவற்குழி மகாவித்தியாலயத்தில் இருந்த காலங்களில் உங்களால் மட்டுமே ! குறிப்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும், அனைத்து வகுப்புக்களுக்கும் நேர அட்டவணை, எந்தக் குழப்பங்களும் இன்றி, குறுகிய நேரத்தில் போட்டுக் கொடுக்கக் கூடிய வல்லவராக இருந்தீர்கள், காலங்களைக் கணித்து, தடைகளை தாண்டக் கூடிய சாதனையாளர் நீங்கள். எங்கள் வழிகாட்டியில் நற்குணம் மிக்கவரே சுப்பையா மாஸ்டர் !! கடைசியாக நீங்கள் ஓர்தடவை உங்கள் மூத்த மகள் வீட்டில் திருகோணமலையில், என்னை சந்தித்தபோது, கண்டவுடன் கட்டியணைத்து, டேய் நீங்கள் எல்லாம் என்னைச் சுற்றி இருக்க வேண்டுமடா, வாடா உனக்கு நான் காணி வாங்கித்தாறன் எனதருகில் என, அன்போடு அழைத்ததை என்றும் மறக்க முடியாது. கண்டியில் சிலகாலம் இருந்து விட்டு நான் இடம் மாறும்போது, தவநாதன் அண்ணா வீட்டில் இருந்து உங்கள் கடைசிமகள், தங்கை துஷ்ஸியுடன் ஓர் நாள் கால்நடையாக சில மாணவர்களின் வீடுகளுக்கு செல்லும் போதும், உங்கள் சிறப்புக்களையே மீட்டுச் சென்றதும், என்றும் என் நினைவில் பதிந்துள்ளது...... தாங்கிக் கொள்ள முடியாத இவ் இழப்பை, இத் துயரத்தில் உங்கள் பிள்ளைகள் குடும்பத்தினர் எல்லோருடனும், எம்மையும் இணைத்து. உங்கள் ஆத்மா சாந்தியடைய, இறைவனை வேண்டி நிற்கிறோம். இரவிக்குமார் திருச்செல்வம் (இந்து)
We send our our deepest condolences for your loss, please accept our heartfelt sympathy. Our memories with him will always be cherished. Senthil & family Canada (Relative)