யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுப்பையா அவர்களின் வீட்டுக்கிருத்திய அழைப்புதழும், நன்றி நவிலலும்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட பொன்னம்பலம் சுப்பையா அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் அன்புத்தெய்வம் பொன்னம்பலம் சுப்பையா(ஜே.பி) அவர்களின் அந்தியேட்டிக் கிரியை 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் எதிர்வரும் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பகல் 10:30 மணியளவில் அன்னாரின் நாவற்குழி இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
We send our our deepest condolences for your loss, please accept our heartfelt sympathy. Our memories with him will always be cherished. Senthil & family Canada (Relative)