

கண்ணீர் பூக்கள் தூவுகின்றோம் ,,,,, அழியாத நினைவுகளுக்குள் ஓடி ஓடி மாமியின் நினைவுகளை அங்கும் இங்கும் தேடிப்பார்க்கிறேன். சிறு காற்சட்டை கட்டி சிறுவனாய் சிரித்தபடி,, என் சின்னமாமி வீடு ஓடி வந்த ஞாபகம் நல்லா வருகுது பொரி உருண்டையும் பொரிச்ச அரிசியும் பொட்டுக்கடலையும் புளுக்கொடியிலும் போதும் போதுமென என் சின்னமாமி தர நான் சாப்பிட்டது போக ,,,அந்த மணிமேகலை வந்து கத்திய அந்தக்குடாவில் அருகில் இன்னும் இரு மாமி வீடுகள் இருந்தது உறவாட ,, சின்னாவும் தம்பியும் சிவாவும் மட்டுமல்ல மச்சாள் மாரும் சேர்ந்து மனமகிழ்வோடு விளையாடிய கனாக்காலம் அது ,, உருவாகி உருக்கி உயிர் கொல்லும் கான்சர் நோய் ஒரு ஆசைமாமி இராசம்மாவின் உயிரோடு போராடிய காலமும் அது கொடுங்காலன் எங்கள் எல்லைகாத்த தில்லைவெளி தாயையும் தாண்டி இராசம்மா மாமியின் உயிர்பறித்த பொழுது எழுந்த அழுகை ஓலம் இன்னும் என் செவிப்பறையில் இடியாய் தான் இடிக்குது அப்பாவின் சின்னாச்சியும் அங்க இருந்து அழுத நினைவு வருகுது,, அன்றே இரு வீட்டுக்கும் தாயாகி ,,தங்கை பிள்ளைகளையும் தன் அன்புச்சேய்களாக்கி இன்பதுன்பங்கள் அனைத்திலும் அன்பினை சொரிந்த தாய் ,,,எங்கள் காமாச்சி மாமி ,,,,,ஆம் நீளஓடும் நினைவுகளின் காமாச்சி மாமி ஒரு ஆலமரம் அகல விரித்த சிறகுகளால் குஞ்சுகளை காத்த தாய்ப்பறவை அன்பை பொழிந்து உறவுகளின் நெஞ்சங்களில் நிறைந்து நின்ற சொந்தம் கால ஓட்டம் அவாவையும் கடைசில் இந்த கடுமையான நேரத்தில் பிரித்துவிட்டது அருகில் இருந்தும் அவவின் துயர நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத நிலை ,,,என்ன செய்வோம் ,,,,அவவின் ஆத்மா ,,, அன்னை தில்லைவெளித்தாயின் திருத்தாள் சேர்ந்து சாந்தி பெறட்டும் ,,,,,,,ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ,,,,,,, மாமியின் பிரிவுத்துயரால் தவிக்கும் மருமகன் ,,வரன் குடும்பம்