1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் காமாட்சி
வயது 86
அமரர் பொன்னம்பலம் காமாட்சி
1935 -
2021
நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Bussolengo ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் காமாட்சி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-12-2022
ஆண்டு ஒன்று ஆனதம்மா
உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து
எம்மை துடி துடிக்க வைக்குதம்மா!
உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது- ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்கிறது....
ஆறாமல் தவிக்கின்றோம்
நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்