Clicky

பிறப்பு 19 NOV 1933
இறப்பு 07 DEC 2021
அமரர் பொன்னம்பலம் இராமலிங்கம் (Rp Master)
முன்னாள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பெளதிக ஆசிரியர்
வயது 88
அமரர் பொன்னம்பலம் இராமலிங்கம் 1933 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜெயலக்ஷ்மி கந்தசாமி 10 DEC 2021 Canada

எங்கள் பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் RP Sir காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனத்துயரடைந்தேன். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் சிறிது காலமும் பின்னர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் அன்னாரிடம் பௌதிகவியல் கற்கும் பேறு எனக்கு கிடைத்தது. பௌதிகவியலை மிக தெளிவாக விளக்கும் அவருடைய திறன் மட்டுமல்ல அமைதி, பொறுமை, நிதானம், அன்பு, அக்கறை முதலான அவரது அரிய பண்புகளும் மாணவர்களை மிகவும் ஈர்த்தன. அவரது நல்லியல்புகள் அவர்பால் அளவற்ற மரியாதையை உருவாக்கியது. கல்லூரி காலம் முடிந்த பின்னும் தனது மாணவர்களை அவர் மறந்ததில்லை. அவர்களை சந்திக்கும் வேளைகளில் முகமலர்ந்து அன்போடு உரையாடுவார். சால்புடை நெறிவழி வாழ்ந்த சான்றோர் இவர் என வருகின்ற சந்ததிகளுக்கு அடையாளம் காட்டுமாறு நம்மிடையே வாழ்ந்து இன்று அமரத்துவம் அடைந்துவிட்ட எங்கள் ஆசிரியப்பெருந்தகைக்கு என்றென்றைக்கும் தீராத எம் நன்றிகளையும் வணக்கங்களையும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். அன்னாரின் ஆத்மா துவாளியம்பதி விநாயக பெருமானின் பாதாரவிந்தங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.