மரண அறிவித்தல்
பிறப்பு 19 NOV 1933
இறப்பு 07 DEC 2021
திரு பொன்னம்பலம் இராமலிங்கம் (Rp Master)
முன்னாள் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பெளதிக ஆசிரியர்
வயது 88
திரு பொன்னம்பலம் இராமலிங்கம் 1933 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி கிளானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராமலிங்கம் அவர்கள் 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று உடுப்பிட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்), மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாக்கியவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

வாசுகி, ரேணுகா(ஆசிரியை- பருத்தித்துறை மெதடிஸ் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராமகிருஷ்ணன், மீனாம்பாள், காலஞ்சென்றவர்களான ஈஸ்வரி, பரமேஸ்வரி, தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரன், தசரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

Dr. அஜந்தன், Dr. வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமேஷன், செளமியா, ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், இரகுநாதன், குணபாக்கியவதி, கந்தசாமி மற்றும் சிவராஜராஜேஸ்வரி, சிவகுமாரன்(நிற்சிங்கம்), சுலோசனா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சகுந்தலா, பாலக்குமார் மற்றும் சந்திரா(ஐக்கிய அமெரிக்கா), நளாயினி(லண்டன்), நிரஞ்சனன்(லண்டன்), ஜனார்த்தனன்(அவுஸ்திரேலியா), மயூரதன்(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

சசிகரன்(மலேசியா), காலஞ்சென்ற அனுரதி, ரதிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Meeting ID: 873 7462 4850
Passcode: 731707

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாசுகி அஜந்தன் - மகள்
ரேணுகா வசிகரன் - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices