
யாழ். குப்பிளான் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஜெகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிராக வாழ்ந்து
என் உயிரோடு கலந்தவரே!
எங்கே போனீர்கள்?
எம்மையெல்லாம் விட்டகன்று
பதில் ஏதும் இல்லாமல்
தவிக்கின்றேன் தனிமையில்!
பலகனவுகள் நனவாகும்
பாதியில்
நீங்கள் போனதால்
உங்கள்
நினைவால் பரிதவிக்கிறேன்
என் பலத்தில் ஒரு பாதி
நீங்கள்
என எண்ணியிருந்தேன்
இன்று மறுபாதி என்னிடமில்லையே
எங்குசென்றீர்கள் எம்மையெல்லாம் விட்டுவிட்டு
நினைவுகளில் மறையாது நியத்தில்
மறைந்துவிட்ட
எங்கள் அன்பு அப்பா
கனவிலும் நினைவிலும் உங்கள் துயர் வாட்டுகிறது
எங்கள் துயர் எழுதுவதற்கு
உங்கள்
முகவரியை தேடுகிறோம் அப்பா
கிளையொடு ஒட்டிய உறவுகளை
முடித்து
ஊட்டம் கொடுத்த பூமியோடு
உறவாட சென்றீர்களா அப்பா?
அன்பின் வானம் நீங்கள் அப்பா
அதற்கு ஒரு முடிவிலியும் நீங்கள் அப்பா
காலம் இழப்பின் காயங்களை மாற்றும்
என்ற நம்பிக்கையுடன் பத்தாண்டுகள் கடந்தாலும்
நீங்காத நினைவுகளுடன் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
நாளும்
இறைவனை வணங்குகிறோம் அப்பா....
உங்கள் நினைவில் வாடும் மனைவி, பிள்ளைகள்.