1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப்(சாளம்பை) பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்மா பரமசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்