2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 APR 1940
இறப்பு 19 JUN 2019
அமரர் பொன்னையா தாமோதரம்பிள்ளை 1940 - 2019 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தாமோதரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்

அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு இரண்டாகி விட்டது

ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை

ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்

வெற்றிகளை மட்டுமே
எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே
எமக்கான அர்பணிப்பு...!

அன்பு தொடங்கி
அர்பணிப்பு வரை 'அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்