யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சின்னசிறு வயதில் அன்னையவள் மறைந்துபோக சீராட்டி பாராட்டி தோளோடும் மார்போடும் தொட்டணைத்து வளர்த்த
உங்கள் பெற்றகடன் தீர்க்காத பெரும்பாவி ஆனோமோ?......
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும் உங்கள் ஆத்மா சாந்திஅடைத்து இறைவனடிசேர
எல்லாம் வல்ல நயினை ஸ்ரீ தில்லைவெளி பிடாரி அம்பாள் மற்றும் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் பாதம்பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்கைள், உறவினர்கள்.