Clicky

தோற்றம் 20 MAR 1945
மறைவு 14 APR 2026
திரு பொன்னையா விக்கினேஸ்வரன் 1945 - 2026 உரும்பிராய் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கலா - மருமகள் (சரவணமுத்து ஆசிரியர், மகேஸ்வரி ரீச்சரின் மகள்) 15 APR 2026 United Kingdom

விக்கி மாமா, எங்கள் அம்மாவின் மூன்றாவது தம்பி. நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது இருக்கும் போது நீங்கள் நாவலப்பிட்டியில் இருந்து ஒவ்வொரு முறை வரும்போதும் எங்களுக்கு நல்ல நல்ல பிஸ்கற் கொண்டுவந்து தருவதும், வவுனிக்குளத்தில் வயலுக்குப் போட்டு வரும்போது பாலப்பழமும் பட்டுப்புளியும் கொண்டுவந்து தருவதும் இன்னும் பசுமையான நினைவுகள். உங்கள் திருமணம் 1976 இல் மிக கோலாகலமாக நடந்தது். எங்கட வீடுதான் மாப்பிள்ளை வீடு. முற்றத்தில் பெரிய பந்தல், உறவுகள் வருகை, பலகாரச் சூடு, பொன்னுருக்கு, பந்தல் கால் நடுகை எண்எடு எங்கட கொண்டாட்டத்தை கேட்கவா வேண்டும். அப்நாபோதைய நாட்டின் போர் எங்கள் உறவுகள் எல்லோரையும் எங்கெங்கோ பிரித்து வாழவைத்து வாழவைத்து விட்டது. ஒவ்வொரு தடவையும் நாம் ஊருக்கு வரும்போதும் நீங்களும் மாமியும எங்களை வந்து பார்ப்பதும், நாங்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போது என் சாப்பாடு விருப்பம் எண்டு கேட்டு எங்களுக்கு பரிமாறுவதும், பழைய கதைகளைக் நினைவு கூர்ந்து கதைப்பதும் ….. இனி வரும்போது இருக்கதே என்ற கவலை. விக்கி மாமா, உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்ததிக்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! மாமி, துரைமாமா, துதிச்சின்னம்மா, இந்திராமாமா, லிங்கா மாமா, ,சர்மிளா,விகிந்தன், சுரேந்தன், வினோத், இந்துஜா உங்களுக்கும்குடும்பத்தவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.