யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், இராஜ வீதி கோப்பாய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா விக்கினேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
விக்கி மாமா, எங்கள் அம்மாவின் மூன்றாவது தம்பி. நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோது இருக்கும் போது நீங்கள் நாவலப்பிட்டியில் இருந்து ஒவ்வொரு முறை வரும்போதும் எங்களுக்கு நல்ல நல்ல பிஸ்கற் கொண்டுவந்து...