யாழ். அரியலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Neasden, Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா தவம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலும்.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குல விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று Shri Sithi Vinayagar Thevasthanam Temple, Unit B, Rear of, 59 Station Rd, Harrow HA1 2TY, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும், அதனைத்தொடர்ந்து ந.ப 12:30 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை மதிய போசன நிகழ்வும் நடைபெற விருப்பதால் அத்தருணம் தங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மதிய போசன நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 09-03-2023 வியாழக்கிழமைக்கு முன் கீழே உள்ள தொடர்பு இலக்கத்தை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்யுமாரு கேட்டு கொள்கின்றோம்.
May his soul rest in peace. Regunathan's family & Bhavani's family