திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கச்சேரி நல்லூர் வீதி வதிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சிவஞானசுந்தரம் மற்றும் யாழ். திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அற்புதமலர் சிவஞானசுந்தரம் ஆகியோரின் நினைவஞ்சலி.
அமரர் பொன்னையா சிவஞானசுந்தரம்
பிறப்பு : 10 மார்ச் 1927 - இறப்பு : 3 டிசெம்பர் 2009
அமரர் அற்புதமலர் சிவஞானசுந்தரம்
பிறப்பு : 5 டிசெம்பர் 1938 - இறப்பு : 4 டிசெம்பர் 2015
பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன்
இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே.
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே
நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான்
வாழுமா றறியா
மருளனேன்
உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே.