திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் கச்சேரி நல்லூர் வீதி வதிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சிவஞானசுந்தரம் மற்றும் யாழ். திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அற்புதமலர் சிவஞானசுந்தரம் ஆகியோரின் நினைவஞ்சலி.
அமரர் பொன்னையா சிவஞானசுந்தரம்
பிறப்பு : 10 மார்ச் 1927 - இறப்பு : 3 டிசெம்பர் 2009
அமரர் அற்புதமலர் சிவஞானசுந்தரம்
பிறப்பு : 5 டிசெம்பர் 1938 - இறப்பு : 4 டிசெம்பர் 2015
எம் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
அப்பா அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த
நாட்களும் நினைவுகளும் நிலையானவை!
நீங்கள் எங்களுக்கு செய்த நன்மைகள்
எண்ணி முடியாதவை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாதவை...
உங்கள் நினைவுகள்
எத்தனை
வருடங்கள் சென்றாலும் எம்
இதயத்தில் இருந்து அகலாது!
அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான பெற்றோரை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி!
ஆண்டுகள் எத்தனை ஆனது
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு எம்மை
வந்து துடிதுடிக்க வைக்கின்றது...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் பிள்ளைகள்...