2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா இராசரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள்
துயரம் எங்கே மறைந்தீர்கள்...?
உங்கள் உயிர் காக்க ஆண்டவனை
மன்றாடினோம்- ஆனால் எங்களை
ஏமாற்றி விட்டு வெகு விரைவாய்
சென்று விட்டீர்கள்! கனிவான
புன்சிரிப்புடன் பாசம் கொண்டாடி
மகிழும் உங்கள் திருமுகம்
காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக
வழிநடத்தி ஆசி செய்யுங்கள்.....!
எத்தனை காலமானாலும்
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவோடு
நாமிருப்போம்..!
தகவல்:
குடும்பத்தினர்