1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணை பெருங்குள முத்துமாரி அம்மன் கோவிலடி 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா இராசரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்