
அம்பாறை தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையம்மா செல்லப்பா அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கபோடி கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சுந்தரம், சீனியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பவானி, இந்துமதி, சிறிதரன்(பிரான்ஸ்), சாருமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றோசம்மா, காலஞ்சென்றவர்களான கனகசபை, திரவியம், தர்மலிங்கம் மற்றும் புவனேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துரைரெத்தினம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற மேகலா, யமுனா(பிரான்ஸ்), ஜெயசுதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆரணி, அனந்தபிரகாஷ், அனோஜன், ஆரூரன், சலோமி, ராகுலன், சங்கவி, தவேந்திரன், துவாரகன், அட்சரன், கௌதமன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் கல்லடி இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு கல்லடி உப்போடை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.