Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 01 NOV 1930
மறைவு 29 JAN 2021
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா
வயது 90
அமரர் பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா 1930 - 2021 இளவாலை பத்தாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 119 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

“நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன், ஓட்டத்தை முடித்து விட்டேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன், நேரிய வாழ்விற்கான வெற்றிப் பரிசை என் ஆண்டவர் எனக்குத் தருவார்”
2 திமத்தே 4;7,8  


யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், பாண்டியன்தாழ்வு விதான்ஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை மரிய ஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்

பிலாேமினா அவர்களின் ஆருயிர் கணவரும்,

எட்வினா(கனடா), ராஜினா(ஜேர்மனி), அருட்சகோதரி வேஜி(திருச்சிலுவை கன்னியர்), ராஜநாதன்(கனடா), அருட்தந்தை எட்வினாதன்(நிதியாளர், ஆசிரியர்- புனித பத்திரிசியார் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜோசப் நவரட்ணம், பிரான்சிஸ் சேவியர், அருட்சகோதரி ஹயசிந்(திருக்குடும்பக்கன்னியர்) மற்றும் விக்டர் இம்மானுவேல்(பிரான்ஸ்), மேரி திரேசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அன்ரன் பரமநாயகம்(கனடா), ஜோய்(ஜேர்மனி), பெலிஷியா(நிறோ- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றெஜினா(இத்தாலி), திரேசம்மா(கனடா), கமலா(லண்டன்), இம்மானுவேல், காலஞ்சென்றவர்களான லூயிஸ் அல்பிரட், செல்வநாயகம், குணநாயகி, அருட்தந்தை பீற்றர் துரைரட்ணம் மற்றும் லூட்ஸ்(கனடா), பேனடேற்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கரோலின்(கனடா), மிஸேலா(ஜேர்மனி), ஷெரினா(கனடா), எட்றியன்(கனடா), அஸ்லின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராஜர் அவர்களின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் பாண்டியந்தாழ்வு இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு அதனை தொடர்ந்து மு.ப 11:30 மணிக்கு யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் பத்தாவத்தையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:30 மணிக்கு சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எம் கடன் தீர்க்க ஓடி வாராயோ எம் அப்பா
விண்ணை நோக்கி விட்டாய்
எம் அப்பா ஏன் இந்த அவரசம்
சொந்த மண்ணை நோக்கி
பயணிக்க முடியவில்லை அப்பா
ஏன் இந்த கொரானா

எம் சிந்தையில் உதித்ததை
கொட்ட முடியவில்லை அப்பா
மனமோ சோர்ந்து மரத்து நிற்கிறதே
எழுதி வடிக்க முடியவில்லை அப்பா

எம் காதுகளில் உங்கள் குரல் ஓசை கேட்கிறது அப்பா
மகளே, மகனே ஏன் இந்த கவலை என் ஆட்டம் முடித்துவிட்டது
இவ்வுலகில் இனி ஏது எனக்கு வேலை என்கின்றீர்கள் அப்பா
எம் கடமை முடிக்க முடியாது
உம் பிள்ளைகள் நிலைகுழைந்து நின்கின்றோம்

அப்பா என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தீர்கள்
பச்சினங்குழந்தைகனாய் எங்களை தோளில் சுமந்தீர்கள்
கண்டிப்பாய், கவனமாய் எம்மைத் தினந்தோறும் பார்த்தாயே
பழமொழிகள் பல சொல்லி பலபுத்தி கூறினீர்கள்
உங்கள் பகடியான பேச்சில் கூட
பல அர்த்தம் புரிந்து கொண்டோம்

கல்வியின் முக்கியத்தை கடுமையாய் புகட்டி நின்றீர்
எம் வளர்ச்சியின் பாதையில் உறக்கமின்றி உழைத்தீர்கள்
உங்களைத் தொலைத்துவிட்டோம் அப்பா,
உறக்கமின்றி நிற்கின்றோம்

வரவுக்கும் செலவுக்கும் வரையறவு வேண்டும் என்றீர்
படிப்பிற்கும், பாசத்திற்கும் வரையுறவு கொடுக்கவில்லை
அப்பாவின் அருமையை உப்புக்கு ஒப்பிட்டீர்
வாழ்க்கையின் நியதிகளை நியமாக எடுத்து சொன்னீர்
உங்கள் அருமை எமக்குப் புரிந்தும் நியதியின்றி நிற்கிறோம்

எல்லாம் அவன் செயல் என்று அடித்து சொல்வீர்
தேவபூமி தேவையென்று தேவனை நோக்கி சென்றுவிட்டீர்
விடைகொடுக்க முடியாமல் தவிக்கின்றோம் நாங்கள் இங்கிப்
தேசத்தின் நிலைகுழைந்த நிர்ப்பந்தம் நினைத்து
திட்டித்தீர்க்கின்றோம் அப்பா முடியவில்லை 

தகவல்: குடும்பத்தினர்