

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பையா நீக்கிலஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த
காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும்
காணாவிட்டால்
துடித்து பதை
பதைத்த நினைவுகளை
இன்னும்
கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால்
அரவணைத்து
பண்பால் வழிநடத்திய
அந்த நாட்கள்
எமை விட்டு
நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம்
கொள்கை நம் வாழ்வில்
என்றும்
மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி ஆத்மசாந்திக்காக 2022.05.05 வியாழக்கிழமை அன்று பி.ப 5:00 மணியளவில் திருகோணமலை லூர்து அன்னை ஆலயத்திலும் மறுநாள் 2022.05.06 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 6:00 மணியளவில் வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்திலும் இரங்கல் திருப்பலி ஒப்பு கொடுக்கப்படும். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்க வேண்டி நிற்கின்றோம்.
From: Jai Jai, Essex, England- United Kingdom I’ll always cherish the memories I had whilst working alongside yourself and other members of the family. As I sadly say, I am so sorry to hear about...