1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பெரியதம்பி மார்க்கண்டு
வயது 90

அமரர் பெரியதம்பி மார்க்கண்டு
1929 -
2019
மீசாலை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி மார்க்கண்டு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்த்து
இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்து
எம்மை ஆளாக்கி வைத்த தந்தையே நீங்கள்
இவ்வுலகை பிரிந்து ஆண்டொன்று ஆயிற்று
பல்துறை வித்தகனாக பாங்கான பேச்சாளனாக
விளையாட்டு வீரனாக விவசாய விற்பன்னனாக
அதிபராக ஆசிரியராக ஊருக்குத் தொண்டராக - நீங்கள்
ஆற்றிய சேவைகள் உங்கள் நினைவைச் சுமந்திருக்கும்
குடும்பத்தின் தலைவனாய் - குல விளக்காய்
நீங்கள் ஏற்றிய ஒளி நாம் மறவோம்
எண்ணத்தில் நேர்மையும் வாழ்விலே எளிமையுமாய்
நீங்கள் காட்டிய வழி நாம் தொடர்வோம்
தகவல்:
குடும்பத்தினர்