

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி மார்க்கண்டு அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
கோகுலசிறி(சுகாதார முகாமைத்துவ உதவியாளர்- THJ), கோகுலவேணி(ஆசிரியர் -யா/கைதடி விக்கினேஸ்வர வித்தியாலயம்), சாந்தரூபன்(கனடா), குகரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுந்தரம்(ஓய்வுநிலை RDO), தர்மராசா(ADE,முறைசாராக் கல்வி-தென்மராட்சி), தேவலக்சுமி(கனடா), இசைச்செல்வி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அருண்(பொறியியலாளர்), Dr. ஆரணி, ஆதீபன்(பொறியியல் பீடம்- மொறட்டுவ), சாம்பவி(தகவல் தொழில்நுட்பபீடம் மொறட்டுவ), துவேதன்(கணிய அளவியலாளர்), சாருதன்(சித்தமருத்துவதுறை- யாழ்ப்பாணம்), சாருஜா(2019, A/L Bio, யா/ வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை), விஷ்ணு(கனடா), விஷாலி(கனடா), கோபிதன்(கனடா), வேரகன்(கனடா), வைஸ்ணவி(Demo- UOM), Dr. துளசிராம் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, மயில்வாகனம், கற்பகம், காசிப்பிள்ளை, மற்றும் சதாசிவம்(ஓய்வுநிலை வரி அளவீட்டாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, பேரம்பலம், பொன்னம்பலம், யோகம்மா, சுப்பிரமணியம், தெய்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-1-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.30 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.