ஓமந்தை நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், சேமமடு, தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி தர்மபுத்திரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உன்னை போல்
ஒரு தெய்வம் எங்கேயும் நான் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல் தாயை
நான் பார்க்கவில்லை!
தாயே நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும் உன்னையே நினைத்திருக்கும்
நான் அழும்போது என் கண்ணீர் துடைத்த
உன் கரங்கள் எங்கே அம்மா?
இன்று என் கண்களில் இவ்வளவு கண்ணீர் வடிகிறதே!
கொஞ்சம் என் கண்ணீரை துடைத்துவிட்டு
மீண்டும் உறங்குங்கள்
என் வரவிற்காய் காத்திருக்கும் உன் விழிகள்
ஏன் இன்று உறங்குகிறது
உன் செவிகளுக்கு கேட்கவில்லையா?
என் தனிமையின் அழுகுரல்கள் அம்மா அம்மா என்று
கனவுகள் கூட கலையலாம் ஆனால்
உன் நினைவுகள் என்றும்
என் மனதை விட்டு கலையாது
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!