யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரின்பநாயகம் சந்திரகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேற்று வீ(பே)சிய பூங்காற்று ஓய்ந்து
ஓராண்டாயிற்று
தோற்றுப்போனதாய் வாழ்வு
காற்று மறுத்த சுவாசமாய் மனது
பயணச் சாலைகளில்
பார்க்கும் வெளிகளில்
வீட்டின் அறைகளில்
வெறுமையின் நிரம்பல்
கை பிடித்து நடந்ததை
கதைகள் பேசி மகிழ்ந்ததை
கண் சுருக்கி சிரித்ததை
மறக்க மறுக்கும் நிஜம் அப்பா....!
தோளில் ஊஞ்சலாய்
கைவிரல் பிடித்து நடந்த பாதையாய்
தோழனாய் வழிகாட்டிய வல்லமை
பயணத்தின் பாதியில் நீங்களில்லா தனிமை
எஞ்சிக் கிடக்கிறது வாழ்வின் தூரம்
எங்களுக்கு உங்கள் பிரிவால்
நெஞ்செல்லாம் பாரம்
கொஞ்சி மகிழ்ந்து குதூகலித்தை
நினைக்க நினைக்க இனிக்கிறது
நீங்களில்லா இன்று கண்கள் பனிக்கிறது
காலம் கடந்தும் உங்கள் பாசம் நீளும்
நீங்காத நினைவுகளே இனி எந்நாளும்
அமைதியாய் உறங்குங்கள்
ஆன்மாவின் சாந்திக்காய் தொடரும் எம் பிரார்த்தனைகள்
jeya London 07747071591 call me