எமது சங்கத்தின் நிரந்தர உறுப்பினரும், சமூகசேவையாளனும் “பேரின்பம்” என்று எம்மால் அன்பாக அழைக்கப்படும் திரு .பேரின்பராஜா செல்லத்துரை அவர்கள் எம்மை விட்டுவிட்டு மீளாத்துயிலில் சங்கமித்துவிட்டார். இப் பேரிடியான செய்தி கேட்டு நாம் எல்லோரும் மனமுடைந்து, கதிகலங்கி நிற்கின்றோம். ஆங்கிலேயரின் காலை உணவை எந்நேரமும் விரும்பி சுவைத்து உண்ணும் அன்பின் உருவம், அவ் உணவின் சுவையை தனது சொல் வளத்தைப் பாவித்து எம்மையும் உண்ணவைக்கும் விற்பன்னன், அனைவரையும் அரவணைத்து அன்புடன் பழகும் இளகிய மனமுடையோன். எம்மையெல்லாம் விட்டு செல்ல காலன் தான் தங்களின் தற்போதைய அன்பு நண்பனோ ! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை மனமுருகிப் பிரார்த்திக்கின்றோம் . அன்னாரின் பிரிவால் துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்துனர் , உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், இத் துயரில் இருந்து மீண்டுவர எல்லாம் வல்ல ஆண்டவன் அருள்புரிவாராக . ஓம் சாந்தி , ஓம் சாந்தி ஓம் சாந்தி பாலர் ஞானோதய சங்கம் - UK Email: info@gnanothaya.org.uk
Please accept our deepest Sympathies. May his soul rest in peace. .