Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 MAY 1959
இறப்பு 07 AUG 2022
அமரர் பேரின்பராஜா செல்லத்துரை
பிரபல தொழிலதிபர்- தென்கிழக்கு இங்கிலாந்து, தாளையன் Hotel அதிபர்- இலங்கை
வயது 63
அமரர் பேரின்பராஜா செல்லத்துரை 1959 - 2022 Seremban, Malaysia Malaysia
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris, டென்மார்க் Fredericia ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Orpington ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பராஜா செல்லத்துரை அவர்களின் நன்றி நவிலல்.

ஓர் திங்கள் ஆனதுவோ... கண்மூடித்திறக்கும் முன்னே
அப்பா..! அப்பா..! என்றழைக்க என் உதடுகள்
இன்னமும் தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை

31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அப்பா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
சென்றாலும் மறையாது அப்பா!

31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும் அரவணைப்பும்
என்றும் எம் நினைவை விட்டு அகலாது

உங்கள் பிரிவால்
வாடும் குடும்பத்தினர்..!!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 10-09-2022 சனிக்கிழமை அன்று பி.ப 12.00 மணிமுதல் பி.ப 3.00 மணிவரை Orchard Park High School, Orchard Way, Croydon CR0 7NJ, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.