5ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/202508/2c010b17-9287-4d8f-96d9-391e2d20b260/22-61dbd9e0f2743.webp)
அமரர் பேர்சி பிலிப்ஸ் லியோ மதனராஜ்
(மதன்)
லியோ எண்டபிரைஸ் உரிமையாளர்
வயது 47
![](https://cdn.lankasririp.com/memorial/profile/202508/1b531e69-e839-4a1b-b1c0-738e5506fde2/21-6061a3ae12022-md.webp)
அமரர் பேர்சி பிலிப்ஸ் லியோ மதனராஜ்
1972 -
2020
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேர்சி பிலிப்ஸ் லியோ மதனராஜ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஐந்து
அகன்றோடி மறைந்தாலும்
இவ்வுலகின் முன்னே
நீ இல்லாமல் போனாலும்
எம் மனதில் உன் நினைவு
நீங்கித்தான் போய் விடுமோ.
கதைகளால் சிரிக்க வைத்தாய்
பாசத்தால் வியக்க வைத்தாய்
கண்ணீரில் தவிக்கவிட்டு
எங்கே நீ சென்றுவிட்டாய்?
கண்முன்னே உன் உருவும்
காதினிலே உன் கதையும்
நெஞ்சகலா நினைவுகளும்
நீங்காமல் நிலைத்ததடா.
மானிடராய் பிறந்தவரை
மரணம் அழைத்தல் நிஜம்
மதன் உந்தன் இழப்பினையோ
மனம்
ஏற்க மறுக்கிறதே.
ஆண்டுகளால் எம் துயரை
ஆற்றிடவும் முடியாது.
காலத்தால் உன் நினைவை
அழித்திடவும் முடியாது.
எங்கள் உயிர் உள்ளவரை
எம் மனதில்
நீ யிருப்பாய்.
எல்லாம் வல்ல இறைவனுடன்
நித்தியமாய்
நிலைத்திருப்பாய்.
தகவல்:
குடும்பத்தினர்
Thinking of you today and always. - Sukumar, Vanaja, Moira and Ira