யாழ். புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் செல்லம்மா அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03-03-2021 புதன்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் சாட்டி தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.