
திதி : 19-07-2025
யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஐயாவைப்பற்றி நாம் சொல்ல வார்த்தையில்லை
சொல்லுவதென்றால் ஆயிரமாயிரமாய்
லட்ச லட்சமாய்
வார்த்தைகள் உதிர்க்கிறது
அதையும் மீறி கோடானு கோடியாய்
கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் வழிகிறது
ஐயா! மிகப்பெரிய ஆதாரமாக மிகப்பெரிய
வலிமையாக
பிரியமாக பரிவாக ஓயாது பொழிந்து
பயிர் வளர்க்கும் நன் மழைபோல்
தன்னைப் பொழிந்து
எங்கள் எல்லோரையும் வளர்த்தவர்.
ஐயாவோடு நாம் வாழ்ந்த கடந்துபோன காலங்கள்
மனதோடு எப்போதும் அழிந்திடாமல் அலைகிறதே
எப்பிறப்பில் காண்போம் எங்களினிய ஐயாவை
எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனைக்கும் எம் தந்தைக்கு நிகராகுமா?
எங்களது முன்னேற்றப்படிகளில் ஐயா
உங்கள் பாதம் பதிந்ததை
எப்படி மறந்திடுவோம்
நீங்கள் வாழ்ந்த மண்ணிலே
நீங்காத பெருமை தேடி
பிள்ளைகள் எம்மையும்
நல்வழி காட்டியே
நானிலம் போற்றும் பண்பில்
உருவாக்கிய
தெய்வத்தின் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....! ஓம் சாந்தி....!!!