5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேதுரு அந்தோனிப்பிள்ளை
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்- கிளி /கனகபுரம் மகா வித்தியாலயம்
வயது 81
Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேதுரு அந்தோனிப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து போனாலும்
அழியாது நம் சோகம்
மீளாது எம் துயரம் மறையாது உங்கள் நினைவு
ஆறாத் துயரில் ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டதேனோ
எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி மகிழ வைத்தீரே
யார் கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து தத்தளித்து
மனம் ஆடுகின்றதே நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
எதை இட்டு நிரப்புவோம்
அப்பா கல்லைறைப் பூக்களோடு
எங்கள் கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது அப்பா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that I can do for you than praying. May God bless your soul!