Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAR 1950
இறப்பு 24 FEB 2024
அமரர் பாவிலு திருச்செல்வராஜா (அசன் அத்தான் - சந்திரன்)
வயது 73
அமரர் பாவிலு திருச்செல்வராஜா 1950 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை அந்தோனியார் பதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Assen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாவிலு திருச்செல்வராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வரமான எம் உறவின்று இறையடியில்
சங்கமித்து ஓராண்டு - நின்
பூவுடலின்று பூமியை விலகி
ஓராண்டு
பார் விட்டு நீரும் பரமனிடம்
சென்று ஓராண்டு
பரிதவிக்கிறோம் நாமும்
உம் பிரிவு கண்டு

இறை வாழ்வு என்றும் இன் வாழ்வு
கறையில்லா இல்லற வாழ்வு
குறையில்லா நல்மனத்தோடு
எவர் வாழ்வும் சிறக்க - இரக்கும் உம்
நிறைவாழ்வு
பகை மறந்து நகை புரிந்து -அவர்
நலன் விளம்பும் நற்பதி வாழ்வு
அதுவே நின் வாழ்வு

மனை இனிக்க
நின்மக்கள் பதி சிறக்க
தடம் காட்டி புடம் போட்டு
உரமளித்த நீர்
சுற்றமும் நட்பும் என்றும் பேணிட வேண்டி
மூப்புற்ற போதும் சோர்வுற்று போகாது
அகம் தேடிச்சென்று - அவர்
சுகம் நாடி வந்தீர்

பரிவோடு பேசி
பண்புதனை வளர்த்தீர் - எம்
நினைவுகளை சுமந்து இன்று
நித்திய வாழ்வடைந்தீர் - உம்மை
வரமென்று சொல்வோம்
அதுவே அறமென்று கண்டோம்

வழி தந்த நீர்- இன்று
விழிமூடிச் சென்று
வருடமொன்று ஆனபோதும்
பிரிந்த வலி வாட்டுகின்றது
நின் முகம் காண
எம்மகம் நித்தம் ஏங்குகிறது
இறை தேடிய உம் இதயம் - என்றும்
அவரடியில் ஓய
நித்தமும் வேண்டுகிறோம்

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 25 Feb, 2024