Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1964
இறப்பு 07 JUL 2026
திருமதி பவளராணி ஜெயானந்தா
வயது 61
திருமதி பவளராணி ஜெயானந்தா 1964 - 2026 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பறாளாய் வீதி, சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பவளராணி ஜெயானந்தா அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மரகதவல்லி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பத்மநாதன் பராசக்தி (நெசவு ஆசிரியை) தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஜெயானந்தா (FRANCE) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிவேதிகா (UK), சாயினி (COLOMBO) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் ஆசைத் தங்கையும்,

செல்வராஜா (UK), ஜெயக்குமார் (GERMANY) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரேமளா (GERMANY) அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

நிவித்தா - தர்சன் (SWISS), நிருசங்கர், ஜனார்த்தனன் (GERMANY) ஆகியோரின் நேசமிகு பெரியம்மாவும்,

அடீஸ்ஜெய், ஆலியாமிலா (SWISS) ஆகியோரின் பேரன்பு மிக்க பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Mahinda Funeral Parlour (No. 591, Galle Road, Mount Lavinia) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பிற்பகல் 01:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற பின்னர், கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming: Click here

தகவல்: கணவர், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

ஜெயானந்தா - கணவர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices