7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பவளம் நவரத்தினம்
வயது 101
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளம் நவரத்தினம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஏழு ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
அழியாத பொக்கிஷம் அம்மா!
பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!
பாசத்தின் பரம்பொருளே எம்மைக்
காக்கும் கடவுள் அம்மா!
காலங்கள் கடந்து சென்றாலும்
இன்னும் உங்கள் நினைவு மட்டும்
நீங்கவில்லை அம்மா!
உங்கள் அன்பான பேச்சும் இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும் உன் போல
துணையும் யாருமில்லை இன்றுவரை
காலங்கள் போகலாம் காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள் என்றும்
நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மகாதேவன் குடும்பத்தினர்.
I am so sorry for your loss, my thoughts and prayers are with you during this difficult time.