யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளம் நவரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் மடிசுமந்து
பக்குவமாய் பெற்றெடுத்து
பாலோடு பாசத்தையும் ஊட்டி
கண்களைப் போல் எமைக்காத்து
கண்ணியமாய் வாழவைத்த அன்புத்தாயே!
கண்ணில் அழுகை ஓயவில்லை
நெஞ்சம் உன்னை மறக்கவில்லை
நேசம் என்றும் நிலைத்திருக்க
பாசத்தை தந்து பறித்தெடுத்தவனே!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அம்மா!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை
விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
I am so sorry for your loss, my thoughts and prayers are with you during this difficult time.