1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1933
இறப்பு 04 DEC 2020
அமரர் பற்குணமலர் பாலசுப்பிரமணியம் (பவளம்)
இளைப்பாறிய ஆசிரியை- யா/ மானிப்பாய் மெமோரியல் பாடசாலை
வயது 87
அமரர் பற்குணமலர் பாலசுப்பிரமணியம் 1933 - 2020 உடுவில், Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 23-11-2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பற்குணமலர் பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம்
என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை

அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்

காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும் குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா

மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 10 Dec, 2020
நன்றி நவிலல் Sat, 02 Jan, 2021