1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பத்மநாதன் இளையதம்பி
ஓய்வுபெற்ற விமானப்படை தொழில்நுட்பவியலாளர் இலங்கை
வயது 84
Tribute
37
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் இளையதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-02-2022
ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!
தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கரைந்ததேனோ காற்றோடு?
வானம் விரிந்திங்கு
வண்ண மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்
அப்பா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Jeyanthini, saddened to hear about the departure of your loving father. Hope you find peace in knowing that he has joined your mother. Please accept our deepest condolences. We pray for you...