12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பார்வதியம்மா செல்வத்துரை
மறைவு
- 18 DEC 2012
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும், கொண்டிருந்த செல்வத்துரை பார்வதியம்மா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பிரியமே எங்களை
விட்டு பிரிந்ததுதான் ஏனம்மா?
எங்களை தவிக்கவிட்டு
தூரப்போனதும் ஏனம்மா?
தேவதையே உனை எண்ணி
தேடி அலைகின்றோம் உன்
திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது
உன் நினைவு தூங்கி எழும்போதும்
கனக்கிறது எம் இதயம் கட்டிய
கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
உனை இழந்து உயிர் துடிக்கும்
உன் உறவுகள் உன் பிரிவால்
நாளும் உனை தேடும் நம்
சொந்தங்கள் கதறி அழுகிறோம்,
கலங்கித் துடிக்கிறோம் கண்
காணாமல் மறைந்து விட்டாயோ?
ஆண்டுகள் பல ஓடிமறைந்து
விட்டது ஆனாலும் என்றென்றும்
உம் நினைவலைகள் அழியாது
எங்களுடனே வாழும்!!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..!
தகவல்:
செல்வத்துரை குடும்பம்