வவுனியா செட்டிகுளம் பெரியபுளியாளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பார்வதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் எல்லோரையும் பெற்றீர்கள் பெயரிட்டீர்கள் வளரத்தீர்கள்
உங்கள் கைப் பட்ட தெல்லாம் பொன்னாக மாற்றினீர்கள்
உங்கள் கைகளில் நாங்கள் வளர்ந்தோம்
எங்கள் பிள்ளைகளையும் உச்ச அளவுக்கு வளர்த்து ஆளாக்கியிருக்கிறோம்
இவை யாவும் நீங்கள் போட்ட பிச்சை அம்மா
நாங்கள் வழிபடும் இறைவனின் வழிமுறைகளும்
நீங்கள் தந்த வார்த்தைகளும் எங்களுக்கு மத்திரங்கள் அம்மா
மீண்டும் நாங்கள் பிறக்கும் வரம் வேண்டும் என்றால்
உங்களுக்கு பிள்ளைகளாகப் பிறக்கும் வரம் வேண்டுவோம்
காலம் மாறினும் தேசம் அழியுனும்
உங்கள் நினைவை இருத்தி வாழ்வோம்
இங்ஙனம் என்றும் உங்கள் நினைவில் நீங்காதிருக்கும்
பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மருமக்கள் பெறாமக்கள் உறவினர்கள்