கண்ணிரால் மலர் தூவி காலமெல்லாம் காத்தி௫ப்போம் ஆழ்ந்த அனுதாபம் பாலசுப்பிரமணியம் சுரேஸ் நித்திய புன்னகை கொண்ட மச்சானே நின்மதியாக தூங்கி விட்டாயா எம்மை எல்லாம் உறவு சொல்லி உரிமையோடு அழைத்தாயே மச்சான் ஏன் இந்த அவசரம் மாமா போன துயரை இன்னும் எங்களால் மறக்க முடியவில்லை சாவைத் தேடும் வயதில்லை உனக்கு காலனின் பசிக்கு இரையாகிணாயா என் சொந்தமும் நீயே என் உயிர் உள்ள வரை இதயத்தில் பூசிப்பேன் உடலால் அழிந்தாலும் எங்கள் உடன் உயிராய் நீ இ௫ப்பாய் கண் முடிணாலே என் முன் நீ தான் வந்து போகிறாய் பெரியப்பா எங்கே என்று என் பிள்ளைகள் தெடுகிறார்கள் ஓடி வந்து பார்ப்பற்க்கு நாட்டு சூழ் நிலை தடுக்கிறது இனி எப்போது பாப்பேன் மச்சான் மாமிக்கு எப்படி ஆறுதல் கூறுவார் விண்ணுக்குள் வாசல் திறந்தி௫க்க விதி உன்னை வா என்று அழைக்கிறது காலனின் கயிறு கட்டி இழுக்கிறது சென்று வா மச்சான் ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி குமார் வாணி லேனா லேனிதா லேனிசன் லேதிகா லேனுஐன்
Suresh Anna, May God bless you rest in peace! We will never forget your smiling look!!