Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 DEC 1983
இறப்பு 02 JUN 2013
அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்
வயது 29
அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம் 1983 - 2013 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வெம்பிளி லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் சுப்பிரமணியம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி. 

காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே!

காற்றோடு கலந்து நீ
இறைவனடி சேர்ந்தாலும்
 கோலத்தால் அழிந்து கல்லறை
துயின்றாலும் காலத்தால் அழியாத
 கற்சிலை ஆனாலும் நினைவுக்
 கல்வெட்டில் நின்நாமம் நிலைத்தாலும்
எம் இதய மென்தட்டில் -உம் நினைவுத்
 தடங்கள் நீங்காத நினைவாக
நிலைத்து நிற்குமையா!

பார்த்தீபா, உன்னுடைய கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும் பாசத்துடன்
உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து கண்ணீர்
சொரிகின்றோம்..!

நெஞ்சுக்கு நினைவாகி- எம்
 உயிருக்கு வலியாகி காரிருளில்
கலந்துவிட்ட- எம் உயிரின் உயிரை
 மனவிளக்கு ஏந்தியே
 தேடுகின்றோம்!

உம் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos