Clicky

தோற்றம் 15 FEB 1929
மறைவு 26 APR 2021
அமரர் பராசக்தி நாகலிங்கம் 1929 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சாந்தா 10 MAY 2021 Australia

பாசமாக எங்களை அன்புடனும் கண்டிப்புடனும் வளர்த்து அதே நேரம் உங்கள் அநுபவ அறிவை எங்களுடன் பகிர்ந்து எல்லோரும் விரும்பும் ஒருவராக வாழ்ந்து காட்டினீர்கள் அம்மா. எவராலும் ஈடு செய்து நிரப்ப முடியாதது உங்கள் இழப்பு. எங்கள் இறுதிக்காலம் வரை உங்கள் அன்பான சிரித்த முகமும் உங்களுடைய நினைவுகளும் என்றும் .என்னுடைய ஒவ்வொரு செயலிலும் உங்கள் நினைவே அம்மா. வார்த்தைகளினால் வெளிப்படுத்த முடியாத துயரம். நான் வருகிறேன் என்ற மகிழ்ச்சியில் காத்து இருப்பீர்கள். ஆகாயவிமானம் சீராகஓடத்தொடங்க என்னை வரச்சொல்லி விட்டு இப்போ நீங்கள் சென்று விட்டீர்களே அம்மா இனி நான் உங்களை பார்க்க முடியாதே அம்மா...