Clicky

பிறப்பு 19 MAY 1974
இறப்பு 10 OCT 2025
திருமதி பரராஜசிங்கம் ஹஜினாகலா (கஜி)
வயது 51
திருமதி பரராஜசிங்கம் ஹஜினாகலா 1974 - 2025 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அம்மாவின் நினைவலைகள் - செல்ல மகன் கரேந்த் 17 OCT 2025 United Kingdom

நான் குழந்தையாக இருக்கும் போது நிறைய அழுவேன். எப்போதும் என்னை அமைதிப்படுத்தி மீண்டும் சிரிக்க வைப்பது அம்மாதான். ஆரம்பத்திலிருந்தே, அவர் தான் எனக்கு ஆறுதல், பலம், மிகப்பெரிய ஆதரவு. நான் நலமாக இருப்பதை உறுதி செய்வதற்காக அம்மா தனது சொந்த மகிழ்ச்சியை நிறைய தியாகம் செய்தார். என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்தார். தனக்கு அளவு கடந்த வேலைகள் இருந்தாலும், அம்மா எப்போதும் எனக்காக நேரம் ஒதுக்குவார். தன்னுடைய உடல்நலத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. வீட்டில் அண்ணா, அப்பா மற்றும் எனக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும் போது அம்மா ஒருபோதும் ஒருவருக்கு பக்கசார்பாக நடந்ததில்லை. அமைதியான வார்த்தைகளாலும் நல்ல அறிவுரைகளாலும் அவர் தலையிட்டு, எப்படியோ, எங்களை மீண்டும் ஒற்றுமையாக்கி விடுவார். நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, ​​ஒவ்வொரு மணி நேரமும் என்னை வந்து பார்ப்பார். சில சமயங்களில், நான் நலமாக இருக்கிறேனா என்பதை உறுதிப்படுத்த அம்மா என் அருகில் படுத்து உறங்குவார். எங்கள் அம்மாவின் அன்பிற்கு எல்லையே இல்லை. “உன்னை தத்துகொடுக்கப் போறேன், நீ கத்துவது நாய் குரைப்பது போல் இருக்கின்றது, உன்னுடைய பற்கள் ஏன் அவ்வளவு மோசமாக இருக்கிறது” போன்ற அம்மாவின் கிண்டலான நகைச்சுவைகளை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த தருணங்கள் என்னை சிரிக்க வைத்தன, அதே நேரத்தில் அம்மாவின் உண்மையான அன்பையும் உணர்ந்தின. அம்மா, அவரின் வாழ்க்கையை விட எங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக உழைத்தார். அவர் செய்த அனைத்தும் எங்களுக்காக; எங்கள் மகிழ்ச்சி, எங்கள் வெற்றி மற்றும் எங்கள் அமைதிக்காகவே. அம்மா, நான் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என விரும்புவதற்கு காரணம் நீங்கள். நான் தொடர்ந்து முன்னேறுவதற்கு காரணம் நீங்கள். நான் உங்களை பெருமைப்படுத்துவேன். நீங்கள் கண்ட கனவுகள் அனைத்தையும் நியமாக்குவேன். உங்கள் புன்னகை, உங்கள் நகைச்சுவைகள், உங்கள் அரவணைப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் குரல் ஆகியவற்றை தேடுகின்றது என் மனம். என் வாழ்நாள் முழுவதும் உங்கள் அன்பை என்னுடன் சுமப்பேன். உங்கள் ஆத்ம சாந்தியடையட்டும் அம்மா… உங்கள் நினைவுகளுடன் என்றும் நாங்கள்…..

Tributes